Wednesday, 29 September 2010

அன்பு

உலகமே உன்னை வெறுத்தாலும்                                                                
உன்னை நேசிக்க நான் இருக்கிறேன்
என்னை எங்கும் தேடாதே நான்
உன் இதயத்தில் இருக்கிறேன்
பிரியமுடன் உன் அம்மா.

புன்னகை என்பது எதிரியை கூட
நண்பனாக்கும் ஆனால் கோபம் என்பது
நண்பனை கூட எதிரியாக்கிவிடும் ஆனால்
என்றும் எப்போதும் சிரிப்போம்.

அழகை எதிர்ப்பாக்கும் இதயங்களிடம்
அன்பை காட்டாதே,
உன்னிடம் அன்பு வைக்கும் இதயத்திடம்
அழகை எதிர்ப்பார்க்காதே.

உன் உயிரில்,
உன் உறவில்,
உன் மூக்கில்,
உன் நினைவில்,
உன் அன்பில்,
யார் யாரோ இருக்கலாம்...!
ஆனால் யாரும் இல்லாத போது
உனக்காக நான் இருப்பேன்
உன்மையான நண்பனாக.

Tuesday, 28 September 2010

மொழி பெயர்ப்பாளர் அண்ணா

படித்ததில் பிடித்தது

அண்ணாவின் சாதனை

சுமார் அறுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் திருச்சி தேவர் மன்றத்தில் நீதிக்கட்சியின் மாநாட்டை முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் வர்கள் முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்கள். மாநாட்டின் தலைவர் சர்.ஏ. இராமசாமி முதலியார் அந்தக் காலத்தில் மேடையில் தமிழில் பேசுவது நாகரிகக் குறைவு என்று எண்ணிக் கொண்டிருந்தனர். அரசியல் கூட்டங்களில் தமிழில் பேச வேண்டிய கட்டாயம் எழுந்த போது பேசிப் பழக வாய்ப்பில்லா நிலை இருந்தது . அப்போது இராமசாமி முதலியாரின் ஆங்கிலப் பேச்சை மொழி பெயர்க்க ஒருவர் தேவை என அமைப்பாளரிடம் கூறினார். விசுவநாதமோ வந்திருந்த வழக்குரைஞர்கள் பலரையும் கேட்ட போது அவர்கள் மறுத்துவிட்டனர் . விசுவநாதன் வேதனைப்பட்டார். தலைவரோ, 'மொழி பெயர்ப்பாளர் இன்னும் கிடைக்கவில்லையா?' என மேலும் மேலும் கேட்கத் தொடங்கினார். அந்த நிலைமையில் அவர் சங்கடமறிந்த அன்பர் திரூ. விசுவநாதன் அவர்களிடம் சென்று ''இவர் மொழி பெயர்ப்பாளர். கல்லூரி மாணவர். எம்.ஏ.  படித்தவர்'' என்று பரிந்துரைத்தார். இதைக் கேட்ட விசுவநாதம் சினங் கொண்டார். இது அவரைக் கிண்டல் செய்வதாகப் கருதினார். ''ஒரு பெருந்தலைவரின் பேச்சை ஒரு மாணவரைக் கொண்டு மொழி பெயர்ப்பதை விட ஆங்கிலத்திலேயே இருந்து விட்டால் நன்றாக இருக்கும்'' என விட்டு விட்டார். ஆனால், தலைவர் விடுவதாக இல்லை.'' எங்கே மொழி பெயர்க்க ஆள் கிடைத்து விட்டாரா?'' என்று கேட்டார். விசுவநாதமோ வேறு வழியின்றி அதே மாணவரான சி.என். அண்ணாதுரையை அணுகி அவர் பெயர், ஊர், படிப்பு, வேலை முதலிய விவரங்களைக் கேட்டறிந்த பின் ''நன்றாக மொழிபெயர்ப்பாயா'' என்று கேட்டார். அண்ணாவோ அடக்கமாக ''ஏதோ கொஞ்சம் தெரியும்'' என்று கூறினார். பின்னர் மொழி பெயர்ப்பு வரிக்கு வரி மிகவும் சிறப்பாக நடந்தது. கி. ஆ. பெ. விசுவநாதமுக்கு மகிழ்ச்சி எல்லை கொள்ளவில்லை. தான் ஏதோ சாதனை புரிந்தது போல் மொழி பெயர்க்க மறுத்த வழக்குரைஞர்களிடம் சென்று ''நீங்கள் மறுத்திர்களே! எப்படி மொழி பெயர்ப்பு?'' என்று கேட்டார். அவர்களோ, ''நாங்கள் மறுத்ததால் தான் ஒரு நல்ல மொழி பெயர்ப்பாளர் கிடைத்தார்'' என்று கூறினார். தலைமையேற்ற சர். ஏ. ராமசாமி முதலியாரும் , மொழி பெயர்ப்பு அருமை என்று மகிழ்ச்சியோடு கூறினார். 

 .--எம்ப்ளாய்மெண்ட் சர்வீஸ் செப் 29-அக் 5, 2010