Friday, 8 October 2010

கேரட் நெய்ச்சோறு

தேவையானவை; பிரியாணி அரிசி 2 தம்ளர், கேரட் சாறு 4 தம்ளர், பெரிய வெங்காயம் 3, பச்சை மிளகாய் 2, ஏலக்காய், கிராம்பு, நெய், புதினா, உப்பு.
செய்முறை; அரிசியை ஊற வைக்கவும், மிளகாய்- வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். குக்கரில் நெய் விட்டு- கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், மிளகாயை வதக்கவும். பின்னர் அதில் கேரட் சாறை
ஊற்றி - புதினா இலை, உப்பு போட்டு கொதிக்க வைக்கவும்.
அரிசியை சிறிது நெய்யில் வறுத்து அதில் சேர்த்து, குக்கரை மூடவும். 2 விசில் வந்ததும் இறக்கவும். சத்தான கேரட் நெய்ச்சோறு தயார். எல்லோருக்கும் பிடிக்கும். மதிய சாப்பாட்டுக்கு உகந்தது. 

ராணி இதழ் 3-10-2010.

No comments:

Post a Comment